ADDED : ஆக 01, 2024 11:24 PM

ஜாதி பற்றி பேசியதாக கூறி, எதிர்க்கட்சியினர் என்னை திட்டி தீர்க்கின்றனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் முட்டாள்களை ஊக்குவிக்க மாட்டோம் என்றவர், முன்னாள் பிரதமர் ராஜிவ். நான் பிற்படுத்தப்பட்டவர்களை முட்டாள்கள் என்று கூறவில்லையே.
அனுராக் தாக்குர், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
தனிப்பட்ட தாக்குதல்!
ராகுலின் ஜாதி பற்றி அனுராக் தாக்குர் தனிப்பட்ட தாக்குதல் நடத்தியுள்ளார். பேசியவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி., என்பதால், அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எதிர்க்கட்சியினர் இப்படி பேசியிருந்தால், பதவி நீக்கம் செய்திருப்பர்.
சிவ்பால் யாதவ், மூத்த தலைவர், சமாஜ்வாதி
தகவல் எங்கே?
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் பற்றி இதுவரை தகவல்கள் வெளியிடப்பட வில்லை. மேலும், ஏன் இந்த திட்டம் தனியார் துறையில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது; பொதுத் துறை நிறுவனங்களில் இல்லை?
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்