ADDED : பிப் 29, 2024 11:21 PM

மாண்டியா: ''வெறுப்பு அரசியல் செய்தது இல்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்ததும் இல்லை,'' என்று, மாண்டியா எம்.பி., சுமலதா கூறி உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த லோக்சபா தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். இம்முறை வேறு வழியில் தேர்தலை சந்திக்கிறேன். அந்த தேர்தலும், இந்த தேர்தலும் வேறு. எனது முடிவை நான் தெளிவாக சொல்ல வேண்டும். பா.ஜ., மேலிடம் முடிவு எடுக்கட்டும். வரும் நாட்களில் ஒவ்வொரு தொகுதியாக சென்று, மக்களை சந்திப்பேன். இம்முறை மாண்டியாவில் தேர்தல் சாதாரணமாக நடக்காது; சிறப்பாக நடக்கும்.
என்னை வழிநடத்துபவர்கள் கடைசி வரை என்னுடன் இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்ததும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே எனது பேச்சை பாருங்கள். நான் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்.
விதான் சவுதா ஜனநாயகத்தின் கோவில். அங்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோஷம் எழுப்பியவர் யாராக இருந்தாலும், அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

