ADDED : ஜன 07, 2025 12:00 AM

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை. என்னை மத்திய அமைச்சராக்கியவர் வாஜ்பாய். 2005ல், பீஹாரில் முதன் முதலில் தே.ஜ., கூட்டணி வென்றபோது நான் முதல்வராக வேண்டும் என்பது வாஜ்பாயின் விருப்பம். நான் ஏன் பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறப் போகிறேன்?
நிதிஷ் குமார்
பீஹார் முதல்வர்,
ஜக்கிய ஜனதா தளம்
பொய் வழக்கு போட்டுள்ளனர்!
தெலுங்கானாவில் விவசாயிகளுக்கான ஆண்டு நிதியுதவி 15,000 ரூபாயை, காங்கிரஸ் அரசு 12,000 ரூபாயாக குறைத்துள்ளது. இதை எதிர்த்து எங்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படுகிறது. மக்களுக்காக குரல் கொடுத்த பி.ஆர்.எஸ்., செயல் தலைவர் கே.டி.ராமராவ் மீது, காங்கிரஸ் அரசு பொய் வழக்கு போட்டுள்ளது.
கவிதா
எம்.எல்.சி., பாரத் ராஷ்ட்ர சமிதி
யாராக இருந்தாலும் தவறு!
பா.ஜ., தலைவர்கள், அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு எதிராக தரக்குறைவான விமர்சனத்தை முன் வைக்கின்றனர்; பின், மன்னிப்பு கேட்கின்றனர். பெண்களுக்கு எதிரான தரக்குறைவான விமர்சனத்தை எந்த கட்சியினர் முன்வைத்தாலும், அதை சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் உடனடியாக கண்டிக்க வேண்டும்.
அல்கா லம்பா
டில்லி முன்னாள் எம்.எல்.ஏ.,
காங்கிரஸ்

