ADDED : பிப் 06, 2025 11:30 PM

எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்தால், தேர்தல் கமிஷனை திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி எம்.பி.,க்கள், தேர்தல் கமிஷன் இறந்துவிட்டதாக கூறி, அதன் இறுதிச் சடங்கிற்கு என, ஒரு துணியை பார்லிமென்டிற்கு எடுத்து வந்து, சபை மாண்பை சீர்குலைத்துவிட்டனர்.
சம்பித் பத்ரா, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
அரசியல் கருவி!
பொது சிவில் சட்டம் என்பது, நாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் உண்மையான நோக்கத்துடன் பரவலான விவாதத்திற்கு பிறகு கொண்டு வரப்பட வேண்டிய விஷயம். ஆனால் இதை, பா.ஜ., தன் பிளவுபடுத்தும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசியல் கருவியாக பயன்படுத்தி உள்ளது. இதில் எந்த சீர்திருத்தமும் இல்லை.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
கட்சிக்குள் வெடிகுண்டு!
என்னை அடுத்த முதல்வர் என்று ஒருவர் கூறியதால், காங்கிரசுக்குள் வெடிகுண்டு வந்து விழுந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். எங்கள் கட்சிக்குள் அந்த பிரச்னை இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் கட்சிக்காக உழைக்கிறோம். வெடிகுண்டு இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தான்.
ரமேஷ் சென்னிதலா, கேரள முன்னாள் அமைச்சர் காங்கிரஸ்

