ADDED : பிப் 25, 2024 02:45 AM

கலாசிபாளையம்: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை, அ.தி.மு.க., மாநிலச் செயலர் எஸ்.டி.குமார் நேற்று திறந்து வைத்தார்.
பெங்களூரு கலாசிபாளையத்தின் ராஜகோபால் கார்டனில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உருவச்சிலை 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
இதன் அருகில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை, அ.தி.மு.க., மாநிலச் செயலர் எஸ்.டி.குமார் நிறுவினார். ஜெயலலிதாவின், 76வது பிறந்த நாளை ஒட்டி, நேற்று அந்த சிலையை அவர் திறந்துவைத்தார்.
கர்நாடகாவில் ஜெயலலிதாவுக்கு முதல் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏராளமான அ.தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோ.சமரசம், மாநில அவைத்தலைவர் அன்பரசன், மாநில பொருளாளர் வேடியப்பன், துணை செயலர் கே.திருவேங்கடம், இணை செயலர் சந்திரிகா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிகுமார், சத்யா உட்பட மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.