ADDED : மார் 17, 2024 07:41 PM

புதுடில்லி:உ.பி.,யில் காங்.,-ன் வி.ஐ.பி, தொகுதிகளான ரேபரேலி ,அமேதி தொகுதிகளை அக்கட்சியே கைகழுவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது
உ.பி., மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இத்தனை தொகுதிகள் இருந்தாலும் அமேதி தொகுதி காங்.,கட்சியின் வி.ஜ.பி.,தொகுதியாக கருதப்பட்டு வந்தது. காரணம் முன்னாள் முதல்வர் ராஜிவ் காலம் முதல் தற்போது ராகுல் வரையில் தொடர்ந்து அமேதிதொகுதியில் போட்டியிட்டதே காரணம்.
காங்கிரஸ் கட்சியில் சஞ்சய் , ராஜிவ், சோனியா, ஆகியோர் தொடர்ந்து போட்டியிட்டு வென்றனர். ராகுலும் கடந்த 2014 ம் ஆண்டுவரை அமேதியில் தான் வெற்றி பெற்று வந்தார்.
கடந்த 1999 ம் ஆண்டு முதல் சோனியா அமேதியில் நின்று வெற்றிபெற்றார். தொடர்ந்து ராகுல் அந்த தொகுதியில் வெற்றிபெற்ற போதிலும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுவார்.
அமேதியை விட்டு கொடுத்த ராகுல் 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டார். இங்கு வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து மீண்டும் தற்போது 2024-ல் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார் ஸ்மிருதி இரானி. அதே நேரத்தில் அமேதியில் போட்டியிட போவதில்லை என உறுதிப்படுத்தி உள்ளார் ராகுல்.
1999-ம் ஆண்டு முதல் அமேதியில் போட்டியிட்டு வந்த சோனியா, ராகுலுக்காக விட்டுக் கொடுத்து ரேபரேலி தொகுதிக்கு மாறினார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்.,படுதோல்வி அடைந்த போதிலும் சோனியா ஒருவர் மட்டுமே ரேபரேலியில் வெற்றி பெற்றார். அப்படி இருந்தும் தற்போது 2024-ல் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ரேபரேலியில் போட்டியிடாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சோனியா. ரேபரேலியில் இந்த முறை தோல்வி முகம் என்று கிடைத்த தகவலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் காங்., வளர்ந்து வரும் முகமாக அறியப்படும் சோனியாவின் மகளான பிரியங்கா ரேபரேலியில் போட்டியிடுவார் என உறுதிப்படுத்தப் படாத தகவலாக கூறப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க காங்.,கட்சி ஒட்டுமொத்தமாக உ.பி.,யை கைகழுவுகிறதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

