ADDED : ஜூலை 26, 2011 11:48 PM

புதுடில்லி:'ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர், தன் கட்சிக்காரருக்கு
உதவுவதற்காக, தன்னால் என்ன முடியுமோ, அதைச் செய்வார்' என, மத்திய சட்ட
அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கூறிய விஷயங்கள் குறித்து, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்காக ஆஜராகும் வழக்கறிஞர், தன் கட்சிக்காரருக்கு உதவ, தன்னால் என்ன முடியுமோ, அதைச் செய்வார். இதனால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி, அவர் கவலைப்பட மாட்டார்.அதேநேரத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் கூறிய கருத்துக்களுக்கு, ஆதாரம் உள்ளதா என்பதை, கோர்ட்
தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை பற்றி, கோர்ட்டுக்கு வெளியில்
எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.