sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 விண்வெளியில் ஆய்வு நிலையம் பணியை துவக்கியது இஸ்ரோ 2028ல் முதல் பகுதி செல்கிறது

/

 விண்வெளியில் ஆய்வு நிலையம் பணியை துவக்கியது இஸ்ரோ 2028ல் முதல் பகுதி செல்கிறது

 விண்வெளியில் ஆய்வு நிலையம் பணியை துவக்கியது இஸ்ரோ 2028ல் முதல் பகுதி செல்கிறது

 விண்வெளியில் ஆய்வு நிலையம் பணியை துவக்கியது இஸ்ரோ 2028ல் முதல் பகுதி செல்கிறது


ADDED : ஜன 25, 2026 12:24 AM

Google News

ADDED : ஜன 25, 2026 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளியில் நம் நாட்டின் சார்பில் தனி ஆய்வு நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

விண்வெளி ஆய்வுக்கென பிரத்யேகமாக, ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இதை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகள் நிர்வகிக்கின்றன.

இந்நிலையில், நம் நாட்டின் சார்பில் தனி விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்தது. இந்த விண்வெளி நிலையத்துக்கு பி.ஏ.எஸ்., எனப்படும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் என, பெயரிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டில், தேசிய விண்வெளி தினத்தில் இந்தியா சார்பில் விண்வெளியில் அமைக்கப்பட உள்ள ஆய்வு நிலையத்தின் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது அதன் வடிவமைப்பு பணி துவங்கி உள்ளதாகவும், 'பி.ஏ.எஸ்., --1' என்ற அதன் முதல் பகுதி, 2028ல் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:

பி.ஏ.எஸ்., என்பது இந்தியாவின் சொந்த விண்வெளி ஆய்வகம். விண்வெளி அறிவியல், உயிரியல், மருத்துவம், கோள் ஆய்வுகள் போன்றவற்றுக்கு பயன்படும்.

இதன், 'பி.ஏ.எஸ்., - 1' எனப்படும் முதல் பகுதி, 10,000 கிலோ எடை உடையது. பூமியில் இருந்து 450 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இதை உருவாக்க விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சார்பில், ஆர்வமுள்ள விண்வெளி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us