sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி

/

ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி

ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி

ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி


ADDED : நவ 07, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 07, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த மாணவர் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளனர்.

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஆண்டுதோறும் நடக்கும் மாணவர் சங்க தேர்தல் நேற்று முன்தினம்( நவ.,04) நடந்தது. தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் 42 நிர்வாகிகளை மாணவர் கவுன்சிலர் பதவிகளை நிரப்புவதற்கு நடந்தது. இந்த தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்பு மற்றும் பாஜவின் ஏபிவிபி அமைப்புக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் 9,043 மாணவர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிந்த உடன் இரவிலேயே ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.

ஓட்டுகள் எண்ணி முடிந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.அந்த அமைப்பின் அதிதிமிஸ்ரா . 1,861 ஓட்டுகள் பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பின் விகாஸ் படேல் 1,447 ஓட்டுகள் கிடைத்தது.அதேபோல் இடதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்த கோபிகா பாபு ,2966 ஓட்டு பெற்று துணைத்தலைவர் ஆனார். அவரை எதிர்த்த ஏபிவிபி அமைப்பின் தான்யா குமாரி 1,730 ஓட்டுகள் பெற்றார்.பொதுச்செயலாளராக சுனில் யாதவும் 1,915 இணைச்செயலாளராக டேனிஷ் அலி 1,991 ஓட்டுகள் பெற்றி வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us