திருமண நாளில் கர்நாடக போலீசாருக்கு கட்டாய விடுப்பு
திருமண நாளில் கர்நாடக போலீசாருக்கு கட்டாய விடுப்பு
ADDED : ஜன 30, 2026 06:55 AM

பெங்களூரு: கர்நாடகாவில் போலீசாரின் பிறந்த நாள், திருமண நாளில் கட்டாய விடுப்பு வழங்க, டி.ஜி.பி., சலீம் உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., சலீம் வெளியிட்ட அறிக்கை:
சட்டம் - ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடும் போலீசார், தங்கள் பிறந்த நாள், திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடுவது மிக முக்கியம். இதனால், பிறந்த நாள், திருமண நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நாட்களில், அவர்களுக்கு உயர் அதிகாரிகள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும்.
இப்படி விடுமுறை வழங்குவது, போலீசார், தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை உறுதி செய்யும். மேலும், போலீசார் உணர்வு ரீதியாக புத்துணர்ச்சி பெறுவர். வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சம நிலையில் கொண்டு செல்ல உதவும். இது, போலீசாரின் மன அழுத்தத்தை நிச்சயம் குறைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

