கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
ADDED : டிச 09, 2025 07:22 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் டிச.9 மற்றும் டிச.11 என இரு தேதிகளில் நடக்கிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று ஒட்டுப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (டிச.9) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி உள்ளது. திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமது ஓட்டைச் செலுத்த வந்திருந்தார். அவரை பாஜ வேட்பாளர் ஸ்ரீலேகா வரவேற்றார்.
பின்னர் வரிசையில் நின்றிருந்த சுரேஷ் கோபி தமது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும் தமது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஓட்டுப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது.
முதல்கட்ட ஓட்டுப்பதிவை முன்னிட்டு, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

