sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எனக்கே தெரியாமல் என் வீட்டில் 9 போலி வாக்காளர்கள்; திருச்சூர் பெண் பகீர் புகார்

/

எனக்கே தெரியாமல் என் வீட்டில் 9 போலி வாக்காளர்கள்; திருச்சூர் பெண் பகீர் புகார்

எனக்கே தெரியாமல் என் வீட்டில் 9 போலி வாக்காளர்கள்; திருச்சூர் பெண் பகீர் புகார்

எனக்கே தெரியாமல் என் வீட்டில் 9 போலி வாக்காளர்கள்; திருச்சூர் பெண் பகீர் புகார்

2


ADDED : ஆக 12, 2025 12:56 PM

Google News

2

ADDED : ஆக 12, 2025 12:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: கேரளாவில், தமக்கு தெரியாமல் தமது வீட்டு முகவரியை பயன்படுத்தி 9 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருச்சூர் மாவட்டத்தில் பூங்குன்னம் பகுதியில் பிரசன்னா என்ற பெண் வசித்து வருகிறார். பிளாட் எண் 4C, கேப்பிடல் அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் இருந்து வருகிறார். இதே முகவரியில் இவருடன் 9 பேர் குடியிருக்கின்றனர் என்று கூறி வாக்காளர் சரி பார்ப்பு பணிக்காக அண்மையில் ஊழியர்கள் இங்கு வந்துள்ளனர்.

இந்த முகவரியில் இவர் மட்டுமே தனித்து குடியிருந்து வரும் நிலையில், வாக்காளர் சரிபார்ப்பு ஊழியர்கள், 9 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். இது குறித்து பிரசன்னா மேலும் விசாரிக்கும் போது தான் முறைகேடாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து பிரசன்னா நிருபர்களிடம் கூறியதாவது;

என் குடும்பத்தில் நான்கு பெரியவர்கள், 2 குழந்தைகள் உள்ளனர். எஞ்சிய முதியவர்கள் சொந்த கிராமமான பூச்சினிபாடம் என்ற ஊரில் வசித்து வருகின்றனர். அங்கு தான் அவர்களுக்கு ஓட்டு உள்ளது.

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க ஊழியர்கள் வந்தபோது தான் என் வீட்டு முகவரியை பயன்படுத்தி 9 கூடுதல் பெயர்கள் இணைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது. என் பெயருடன் இதே முகவரியில் 10 ஓட்டுகள் உள்ளன.

ஆனால் என்னை தவிர மற்ற அந்த 9 பேரும் யாரென்று தெரியாது. இங்கு 4 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எங்கள் அனுமதியின்றி பெயர்களை சேர்ப்பது எப்படி சரியாகும்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us