நேதாஜியை பாராட்டாமல் நீங்கள் யாரை பாராட்ட போகிறீர்கள்: பாஜவுக்கு மம்தா கேள்வி
நேதாஜியை பாராட்டாமல் நீங்கள் யாரை பாராட்ட போகிறீர்கள்: பாஜவுக்கு மம்தா கேள்வி
ADDED : டிச 08, 2025 04:20 PM

புதுடில்லி: நேதாஜியை பாராட்டாமல் நீங்கள் யாரை பாராட்ட போகிறீர்கள் என்று பாஜவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
தேசிய பாடல் வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் பார்லி.யில் பிரதமர் மோடி விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது முன்னாள் பிரதமர் நேரு, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
வந்தே மாதரம் முஸ்லீம்களை தூண்டிவிடும் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூக்கு நேரு எழுதிய கடிதத்தையும் நினைவு கூர்ந்து, வந்தே மாதரத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந் நிலையில், கோல்கட்டாவில் நிருபர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜியை பாராட்டாமல் நீங்கள் யாரை பாராட்ட போகிறீர்கள் என்று பாஜவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
நேதாஜியைப் பாராட்டுவதில்லை என்று பாஜவைச் சேர்ந்த சிலர் சொல்வதை கேட்டேன். நீங்கள் நேதாஜி, ரவீந்திரநாத் தாகூர், ராஜா ராம் மோகன் ராய் ஆகியோரை பாராட்டவில்லை எனில் யாரை தான் பாராட்டுவீர்கள்?
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

