தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/2 எஸ்.ஐ., உட்பட 9 போலீசார் மீது கத்திக்குத்து விசாரணைக்கு வந்தவர் வெறி தாக்குதல்

2 எஸ்.ஐ., உட்பட 9 போலீசார் மீது கத்திக்குத்து விசாரணைக்கு வந்தவர் வெறி தாக்குதல்

2 எஸ்.ஐ., உட்பட 9 போலீசார் மீது கத்திக்குத்து விசாரணைக்கு வந்தவர் வெறி தாக்குதல்


UPDATED : நவ 24, 2026 07:08 PM

ADDED : நவ 24, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:08 PM ADDED : நவ 24, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: குடும்பத் தகராறு தொடர்பான புகாரில், விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவர், கத்தியால் குத்தியதில், ஒன்பது போலீசார் காயம் அடைந்தனர். ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற அவரை, போலீசார் விரட்டிச் சென்று, துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

பழைய டில்லி, ஜூம்மா மசூதி பகுதியை சேர்ந்தவர் நபீல்,30. குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து, நபீலின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும், ஜூம்மா மசூதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராக நபீலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் மதியம், 2:30 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு நபீல் வந்தார். அப்போது, அவரது தாய் மற்றும் சகோதரியும் அங்கு இருந்தனர்.

சப்–இன்ஸ்பெக்டர் அஜய் விசாரணை நடத்த முயன்ற போது, நபீல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜய் மீது சரமாரியாக குத்தினார். தடுக்க முயன்ற போலீஸ்காரர்களையும் கத்தியால் குத்தினார்.

அதைத் தொடர்ந்து, ஸ்டேஷனில் இருந்து வெளியில் ஓடினார். போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு ஓடிய நபீல், எதிரில் ஸ்கூட்டரில் வந்த ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, ஸ்கூட்டரை பறித்து அதில் ஏறி தப்பினார்.

போலீசார் விரட்டிச் சென்றனர். சிட்லி கபர் பகுதியில் குறுகிய சந்துகளில் ஸ்கூட்டரில் சென்ற நபீலின், காலில் துப்பாக்கியால் சுட்டனர். காலில் ஆறு குண்டுகள் பாய்ந்து சரிந்த நபீலை சுற்றி வளைத்து கைது செய்தனர். லோக்நாயக் ஜெயபிரகாஷ் அரசு மருத்துவமனையில் நபீல் சேர்க்கப்பட்டுள்ளார்.

நபீல் நடத்திய தாக்குதலில் சப்–இன்ஸ்பெக்டர் அஜய், அரவிந்த் மற்றும் தலைமை போலீஸ்காரர் ஹரேந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உதவி சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கிருஷ்ணா, தலைமை போலீஸ்காரர் பல்ஜீத், சிறப்பு பிரிவு போலீஸ்காரர்கள் அங்கித், ஜெயந்த், லோகேஷ் மற்றும் பர்மிந்தர் ஆகியோரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த போலீஸ்காரர்களுக்கும், லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த ஐந்து பேர், சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் அனுராக் குமார் மற்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மருத்துவமனைக்கு வந்து காயம் அடைந்த போலீஸ்காரர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நபீல் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த, இரண்டு சப்–இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஒன்பது போலீசாரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் நேற்று கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us