தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர் ‘என்கவுன்ட்டரில்’ பலி

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர் ‘என்கவுன்ட்டரில்’ பலி

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர் ‘என்கவுன்ட்டரில்’ பலி


UPDATED : நவ 01, 2026 05:17 PM

ADDED : நவ 01, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 05:17 PM ADDED : நவ 01, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நொய்டா: பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டவர் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமன் தியாகி. உ.பி.,யின் பல மாவட்டங்களில் நடந்த கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட, 20 வழக்குகளில் அமன் தியாகியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அமன் குறித்து தகவல் தருவோருக்கு, 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நொய்டா 126வது செக்டாரில் போலீசார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பைக்கை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அதை நிறுத்தாமல் வேகமாக சென்றார். போலீசார் அந்த வண்டியை விரட்டிச் சென்றனர். பைக்கில் சென்றவர் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

போலீசார் கொடுத்த பதிலடியில் குண்டு பாய்ந்து சரிந்தார். அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், பல வழக்குகளில் தேடப்பட்ட அமன் தியாகி என்பதை அடையாளம் கண்டுபிடித்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்த இரண்டு போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து பைக், துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us