ADDED : அக் 19, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று பிங்க், மெஜந்தா மற்றும் கிரே வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7:00 மணிக்குப் பதிலாக காலை 6:00 மணிக்கு துவங்கும்.
அதேபோல நாளை, கடைசி மெட்ரோ ரயில், விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதை உட்பட அனைத்து வழித்தடங்களின் முனைய நிலையங்களில் இருந்தும், இரவு 11:00 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 10:00 மணிக்கே புறப்படும்.