பாதுகாப்புத்துறை தன்னிறைவில் மைல்கல் : ஆபரேஷன் சிந்துார் குறித்து டிஆர்டிஓ தலைவர் பெருமிதம்
பாதுகாப்புத்துறை தன்னிறைவில் மைல்கல் : ஆபரேஷன் சிந்துார் குறித்து டிஆர்டிஓ தலைவர் பெருமிதம்
ADDED : ஆக 09, 2025 04:29 PM

புனே: 'ஆபரேஷன் சிந்துார்' என்பது இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவதில் ஒரு மைல்கல் என்று டிஆர்டிஓ தலைவர் காமத் பெருமிதம் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் 14 வது பட்டமளிப்பு விழாவில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தலைவர் காமத் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு பதிலடியான நமது ராணுவத்தாக்குலான ' ஆபரேஷன் சிந்தூர்' என்பது, தன்னம்பிக்கை, தொலைநோக்கு பார்வை மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப வலிமை மூலம் உயர்ந்து நிற்கும் திறனை பிரகடனப்படுத்துவதாகும்.
நமது உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு ஒரு அறிவிப்பாக ஆபரேஷன் சிந்தூர் தெரியப்படுத்தியது.
இவ்வாறு காமத் பேசினார்.