மினி ஒலிம்பிக்ஸ் போட்டி நாளை நிறைவு மாணவ - மாணவியர் பதக்க வேட்டை
மினி ஒலிம்பிக்ஸ் போட்டி நாளை நிறைவு மாணவ - மாணவியர் பதக்க வேட்டை
ADDED : நவ 19, 2024 06:30 AM
கர்நாடக ஒலிம்பிக்ஸ் சங்கம் மற்றும் மாநில விளையாட்டுத் துறை சார்பில் மூன்றாவது மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகின்றன. நாளையுடன் இப்போட்டிகள் நிறைவடைகின்றன.
இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பள்ளிகள் சார்பில் அணியாகவும், தனி நபராக மாணவ - மாணவியர் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஐந்தாம் நாளான நேற்றும் மாணவர்களின் பதக்க வேட்டை தொடர்ந்தது.
தடகளம்
400 மீட்டர் ஓட்டப்பந்தயம்: மாணவர்கள்: 1. அஜய் பிருத்விராஜ், 2. ஈரண்ணா ஹடபடி, 3. அமர் கவுடா.
மாணவியர்: 1. கவுரி பூஜாரி, பிருத்வி தாரேப்பா, திவ்யா.
80 மீட்டர் ஹர்டல்ஸ்: மாணவர்கள்: 1. அதர்வா நாயக், துருவன், விவேகா.
மாணவியர்: 1. சாஷ்வதி சுரேஷ், 2. சாக் ஷி சந்தோஷ் கன்ட்ரே, 3. ஹர்ஷினி.
தட்டு எறிதல்: மாணவர்கள்: 1. சூர்யா சமர்த், 2. சுதர்ஷன், 3. சாய் ஹிதேஷ்.
மாணவியர்: தனிஷ்கா, சையது இனாம், சம்பதா.
நீளம் தாண்டுதல்: மாணவியர்: 1. பிராப்தி, 2. யுக்தி, 3. மானிகா ஆத்யா.
டேக்வாண்டோ
21 கிலோ: மாணவர்கள்: 1. ஜிஷ்னு, 2. சவுரியா கார்த்திக், 3. பார்த் நாயக், ஹிமான்க் ரன்வால்.
20 கிலோ: மாணவியர்: 1. ஸ்ரீபிரியா பகடி, 2. கிரஹிதா, 3. வர்ஷினி, பர்னிதா ரங்கம்.
27 கிலோ: மாணவர்கள்: 1. சுஜல் காம்ப்ளே, 2. யஷ்மித், 3. குஷால் மடர், தனிஷ் குரு.
26 கிலோ: மாணவியர்: 1. ககனா, 2. ஹரி பிரியா, 3. அனியா பருயீன், நஸ்னீன் கவுசர் உட்பட 34, 35, 43, 44, 54, 53 கிலோ பிரிவில் மாணவ - மாணவியர் அசத்தினர்.
லான் டென்னிஸ்
ஒற்றையர் பிரிவு: மாணவர்கள்: 1. அர்ஜுன் மணிகண்டன், 2. இஷான் படகி, 3. யஷ் குமார்.
மாணவியர்: 1. அஹிதா சிங், 2. பத்மபிரியா ரமேஷ் குமார், 3. ரியா கங்கம்மா உட்பட இரட்டை பிரிவில் மாணவ - மாணவியர் அசத்தினர்.
கோ கோ
பெலகாவி மாணவர் அணியும், கதக் மாணவியர் அணியும் வெற்றி பெற்றனர்.
கால்பந்து
மாணவர்கள்: 1. ஹாசன் அணி, 2. குடகு அணி
மாணவியர்: 1. பெலகாவி அணி, 2. உத்தர கன்னடா அணி
. - நமது நிருபர் -