டெலிவரி கிடங்கில் ரூ.1.60 கோடி மதிப்பு மொபைல் போன் மாயம்
டெலிவரி கிடங்கில் ரூ.1.60 கோடி மதிப்பு மொபைல் போன் மாயம்
ADDED : நவ 15, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தின் டெலிவரி கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து, 1.61 கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் மாயமானதை நிறுவனம் கண்டறிந்தது.
இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் இது குறித்து கூறியதாவது:
கடந்த ஆக., 8 - அக்., 10 வரை போலி முகவரிகள் மற்றும் வெவ்வேறு மொபைல் எண்களைப் ப யன்படுத்தி, 'பிளிப்கார்ட்' இணையதளத்திலிருந்து, 332 விலையுயர்ந்த மொபைல் போன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
அ வை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நான்கு டெலிவரி கிடங்குகளுக்கு வந்த பின் அனைத்து மொபைல் போன்களும் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக நான்கு டெலிவரி கிடங்குகளின் பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

