மத்திய அரசு அலுவலகங்களுக்கான புதிய கட்டடத்தை திறந்தார் மோடி
மத்திய அரசு அலுவலகங்களுக்கான புதிய கட்டடத்தை திறந்தார் மோடி
ADDED : ஆக 07, 2025 12:26 AM

புதுடில்லி: டில்லி, 'கர்த்தவ்யா பவன்' எனப்படும், கடமைப் பாதையில், நவீன வசதிகளுடன் கூடிய மத்திய அரசு துறைகளுக்கான புதிய பிரமாண்ட அலுவலக கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
டில் லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடம், துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான கடமைப் பாதை ஆகியவற்றை முற்றிலுமாக மறுசீரமைக்க, 2019ல் மத்திய அரசு திட்டமிட்டது .
சென்ட்ரல் விஸ்டா ' சென்ட்ரல் விஸ்டா' என, பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு, 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டு, கூட்டத்தொ டர்களும் நடந்து வருகின்றன.
இதேபோல் துணை ஜனாதிபதி இல்லமும் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மத்திய அரசின், 51 அமைச்சக அலுவலகங்களையும் ஒரே வளாகத் தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த, 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தில், நவீன வசதிகளுடன் கூடிய, 10 பெரிய அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன; இது, 'காமன் சென்ட்ரல் செக்ரட்டேரியேட்' என, அழைக்கப் படுகிறது.
டில்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் கட்டடங்கள், கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இ தேபோல் சாஸ்திரி பவன், க்ரிஷி பவன், உத்யோக் பவன் போன்ற மற்ற மத்திய அமைச்சக கட்டடங்களும் 1950 - 70 காலக்கட்டங்களில் கட்டப்பட்டு இன்றளவும் அதே இடத் தில் இயங்கி வருகின்றன.
இவை அனைத்தும், அமைப்பு ரீதியில் காலாவதியானவை எனவும், போதுமான இடவசதிகள் இல்லாதவை எனவும் மத்திய அரசு கருதியது.
இதையடுத்து, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், 'கர்த்தவ்யா பவன்' என்ற பெயரில், 10 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில், மூன்று கட்டடங்களின் அனைத்து பணிகளும் நிறை வடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி அவற்றை நேற்று திறந்து வைத்தார்.
இதில் மத்திய உள்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வெளியுறவுத்துறை, ஊரக மேம்பாடு, மத்திய பணியாளர் நலத்துறை உட்பட பல அமைச்சக அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளன.
இக்கட்டடம், 16 லட்சம் சதுர அடியில் ஏழு மாடிகளுடன் நவீன கட்டடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன. 30 சதவீத மின்சார செலவை குறைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளன.
புதிய உத்வேகம் இன்னும் இரண்டு கட்டடங்களின் கட்டுமான பணிகள், அடுத்த மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவற்றில் மத்திய நிதித்துறை, ராணுவம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவை மா ற்றப்பட உள்ளன.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறுகையில், 'கடமை பாதையில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தின் வாயிலாக, நம் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக் களுக்கு விரைவாக வழங்குவதை எளிதாக்கும்.
'இது நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் வழங்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.