தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வரும் 16ல் பிலிப்பைன்ஸ் செல்கிறார் மோடி

வரும் 16ல் பிலிப்பைன்ஸ் செல்கிறார் மோடி

வரும் 16ல் பிலிப்பைன்ஸ் செல்கிறார் மோடி


UPDATED : நவ 12, 2026 09:57 PM

ADDED : நவ 12, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 09:57 PM ADDED : நவ 12, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் பயணமாக வரும் 16ம் தேதி தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கு நடைபெறும், ‘ஆசியான்’ உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில், 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இக்கூட்டமைப்பு, பிராந்திய வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆசியான் அமைப்புடன் பேச்சு நடத்தும் நாடுகள் என்ற அந்தஸ்தில் உள்ளன.

இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிப்பதால், அதன் தலைநகர் மணிலாவில் வரும் 16 முதல் 18 வரை மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, 16ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். மேலும், ஆசியான் அமைப்பு நடத்தும் ஆசியான் – இந்தியா மாநாடு, ஆசியான் – கிழக்காசிய மாநாடு போன்றவற்றிலும் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் வர்த்தகம், பாதுகாப்பு குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பான குவாட் மாநாடு நடக்க உள்ளது.

அதில், அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us