
மனித உரிமைகள் தனிநபர் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன; கண்ணியத்தை பாதுகாக்கின்றன; சமூகங்களை சிறந்த முறையில் மாற்றுகின்றன. சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் தார்மீக பொறுப்பு.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி
வரிந்து கட்டுவது ஏன்?
நம் நாட்டில் இருப்பதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக வைத்துள்ளார். பதவிக்காலத்தில் பாதியை வெளிநாடுகளிலேயே அவர் செலவழிக்கிறார். அப்படி இருக்கையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளிநாடு செல்லும் போது மட்டும் பா.ஜ.,வினர் வரிந்து கட்டுவது ஏன்?
பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,
உரிமம் ரத்து செய்யப்படும்!
கோவா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலம் முழுதும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சொந்தமான இரவு விடுதிகளில் ஆய்வு நடக்கிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அவற்றின் வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும்.
பிரமோத் சாவந்த் கோவா முதல்வர், பா.ஜ.,

