சோலார் பம்புகளுக்கு 90 சதவீத மானியம் ம.பி., முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
சோலார் பம்புகளுக்கு 90 சதவீத மானியம் ம.பி., முதல்வர் மோகன் யாதவ் அறிவிப்பு
ADDED : அக் 20, 2025 01:16 AM

போபால்: “மத்திய பிரதேசத்தில், சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய, 'சோலார்' பம்புகளை அமைப்பதற்கான மானியம், 40 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர்,” என, அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'சோயாபீன்' பயிரிடும் விவசாயிகளுக்காக, 'பாவந்தர்' திட்டம் அமலில் உள்ளது.
முதுகெலும்பு சந்தை விலைக்கும், மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலைக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இருந்தால், அதற்கான இழப்பீட்டை விவசாயிகள் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.
இத்திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில், முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது:
தற்காலிக மின் இணைப்புகளுக்கான செலவுகளிலிருந்து விடுபட, சூரிய சக்தியை விவசாயிகள் பயன்படுத்த துவங்க வேண்டும். அவர்களின் அயராது உழைப்பால், ம.பி.,யின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு, 39 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நம் விவசாயிகள் தான் மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அரசின் ஒவ்வொரு முடிவும் அவர்களின் நலனை மனதில் வைத்தே எடுக்கப்படுகிறது.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் நிதிநிலையை வலுப்படுத்த மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
சோலார் பம்புகளை நிறுவுவதற்கான மானியம், இனி விவசாயிகளுக்கு, 40 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
தற்போது வைத்துள்ள பம்புகளை விட அதிக திறனுள்ள பம்புகளும் வழங்கப்படும். அதன்படி, 3 குதிரைத்திறன் பம்பு வைத்திருப்பவர்களுக்கு, 5 குதிரைத்திறன் பம்பு; 5 குதிரைத்திறன் பம்பு வை த்திருப்பவர்களுக்கு, 7.5 குதிரைத்திறன் சோலார் பம்பு அளிக்கப்படும்.
உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில், நாட்டிலேயே ம.பி., முன்னணியில் உள்ளது. ஆரஞ்ச், மசாலா பொருட்கள், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி உற்பத்தியிலும் நம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
நதி இணைப்பு திட்டம் தற்போதுள்ள 52 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனப் பகுதியை, 100 லட்சம் ஹெக்டேராக விரிவு படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பா சன வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், ராஜஸ்தானுடன் பார்வதி- - காளிசிந்த்- - சம்பல், உத்தர பிரதேசத்துடன் கென்-பெட்வா மற்றும் மஹாராஷ்டிராவுடன் தப்தி மெ கா ரீசார்ஜ் திட்டம் உட்பட முக்கிய நதி இணைப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து அரசுக்கு விவசாயிகள் விற்பனை செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.