
தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தங்களின் பிரச்னைகளை சட்டசபையில் அல்லது பார்லி.,யில் எடுத்துரைத்து தீர்வு காண்பர் என்ற எண்ணத்திலேயே, அவர்களுக்கு மக்கள் ஓட்டளிக்கின்றனர். அதை காப்பாற்ற வேண்டிய து அவர்களின் பொறுப்பு; கடமையும் கூட. இதனால் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
ஓம் பிர்லா லோக்சபா சபாநாயகர்
சமரசத்துக்கு இடமில்லை!
மேற்கு வங்கத்தில், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்., தவறான தகவல்களை பரப்புகிறது. போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருவதால், அக்கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். என்ன நடந்தாலும் ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றியே தீருவோம். இதில் சமரசத்துக்கு இடமில்லை.
சுகந்தா மஜும்தார் மத்திய அமைச்சர், பா.ஜ.,
எதுவும் வாங்கியதில்லை!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், முக்கிய குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போத்தியின் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பரிசையும் நான் வாங்கியதில்லை. இந்த விவகாரத்தில், காங்., கூட்டணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
கடகம்பள்ளி சுரேந்திரன் மூத்த தலைவர், மார்க்.கம்யூ.,

