தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி:அடுத்த இலக்கு!

தேசியம் பேட்டி:அடுத்த இலக்கு!

தேசியம் பேட்டி:அடுத்த இலக்கு!

1


UPDATED : நவ 11, 2026 12:00 AM

ADDED : நவ 10, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 12:00 AM ADDED : நவ 10, 2026 08:08 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுத்த இலக்கு!


நம் நாட்டின் ஒரே உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்ட நக்சல் அமைப்பினரை பிரதமர் மோடி ஒழித்து கட்டி உள்ளார். அதற்கு, காங்.,கின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எங்கள் அரசின் அடுத்த இலக்கு, அறிவுசார் நக்சல்களை ஒழிப்பது தான்.
- கிரண் ரிஜிஜூ
மத்திய அமைச்சர், பா.ஜ.,



வெறும் வாக்குறுதி!


டில்லியில், காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது; கடந்த, 12 ஆண்டுகளில், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி வெறும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளார். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், பெயரளவு நடவடிக்கைகளையே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காற்று மாசில், ஏன் நாம் விஸ்வகுருவாக மாறுகிறோம்?
- மல்லிகார்ஜுன கார்கே
தேசிய தலைவர், காங்கிரஸ்



உலகளாவிய தலைநகரம்!


ராமர் கோவில் முறைகேடு சம்பவத்தால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோவில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை அமல்படுத்துவோம். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகளை உருவாக்கி, அயோத்தியை, சனாதன யாத்திரையின் உலகளாவிய தலைநகராக மாற்றுவோம்.
- அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி கட்சி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us