தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கொலைகள் தொடர்ந்தால் ராஜினாமா செய்யுங்கள்: விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., ஆவேசம்

கொலைகள் தொடர்ந்தால் ராஜினாமா செய்யுங்கள்: விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., ஆவேசம்

கொலைகள் தொடர்ந்தால் ராஜினாமா செய்யுங்கள்: விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., ஆவேசம்


UPDATED : நவ 10, 2026 08:17 PM

ADDED : நவ 10, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 08:17 PM ADDED : நவ 10, 2026 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொடர்ந்து கொலைகள் நடந்தால், அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என, விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

அவர், கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 30 நாட்களில் 10 கொலைகள் நடந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையை புதுச்சேரி மாநிலத்தில் பார்த்தது கிடையாது. மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதுச்சேரி அமைதியான மாநிலம் என்ற பிம்பத்ததை அரசு ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இந்த கொலை சம்பவங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

குற்றவாளிகளுக்கு போலீசார் மீது துளி கூட பயம் கிடையாது. கொலைகள் நடப்பதை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்கிறவர்களில் 80 சதவீதம் பேர் கஞ்சாலை பழக்கத்திற்கு ஆளானவர்கள். கஞ்சாவை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரியில் 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். ஆனால், கீழ்மட்டத்தில் வேலை செய்ய போலீசார் இல்லை.ஆறு எஸ்.பி., பணியிடங்கள் காலியாக உள்ளன. காவல் துறையில் பணியிடமாற்றம் கண்துடைப்பாக நடக்கிறது.

சில போலீசார் குற்றவாளிகளிடம் தொடர்பில் உள்ளனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,வே போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போராட்டம் நடத்துகிறார். இத்தனை கொலைகளுக்கு பிறகும் இதுவரை ஒரு டிரான்ஸ்பர் போடவில்லை. தொடர்ந்து கொலைகள் நடந்தால் தார்மீக பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us