தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மேம்பாட்டு பாதை!

மேம்பாட்டு பாதை!

மேம்பாட்டு பாதை!


ADDED : நவ 01, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 09:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேம்பாட்டு பாதை!


நம் நாட்டின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி அன்னா சாண்டியும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி எம். பாத்திமா பீவியும், நிலையான மேம்பாட்டு இலக்கை எட்ட, பெண்களுக்கு அதிகாரமளித்தலே அடிப்படை என்பதை நிரூபித்துள்ளனர். பெண்களை முன்னிலைப்படுத்திய மேம்பாட்டு பாதையை, இந்த நாட்டுக்கு கேரளா காட்டியுள்ளது.
- அர்ஜூன் ராம் மேக்வால்
மத்திய இணையமைச்சர், பா.ஜ.,



வானரப்படை தயார்!


ராவணனான, நம் பிரதமர் மோடியை வீழ்த்த, எங்கள் கட்சித் தொண்டர்களான ‘வானரப் படை’ வந்துள்ளது. ஓட்டுத் திருட்டுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மோடி தலைமையிலான அரசை, மீண்டும் ஆட்சி அமைக்க சதி செய்யவே, 13.5 கோடி ஓட்டுக்கள் நீக்கப்பட்டன; மேலும், 20 கோடி ஓட்டுக்கள் நீக்கப்பட உள்ளன.
- ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்



ஜனநாயக படுகொலை!


காங்கிரசார், அரசியலமைப்பை கொன்றார்கள்; சீக்கியர்களை கொன்றார்கள்; இப்போது ஜனநாயகத்தை படுகொலை செய்து, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வங்கதேசம், நேபாளம் போல் நம் நாடு மாறுவதை, மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டர். இதுபோன்ற போராட்டங்கள், எதிர்க்கட்சியினர் நடத்தும் ஒரு நாடகம்; இதனால் ஒரு பயனும் இல்லை.
- அனுராக் தாக்குர்
லோக்சபா எம்.பி., – பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us