தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி:ஏற்றுக்கொள்ள முடியாது!

தேசியம் பேட்டி:ஏற்றுக்கொள்ள முடியாது!

தேசியம் பேட்டி:ஏற்றுக்கொள்ள முடியாது!


ADDED : நவ 23, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்றுக்கொள்ள முடியாது!


கர்நாடக அரசு நடத்திய பரிசோதனைகளில், எத்தனால் கூடுதலாக கண்டறியப்பட்டதாக கூறுவதை, ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதிரிகள், நேரடியாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதா? நுகர்வோரை சென்றடையும் முன், பல்வேறு நிலைகளை கடந்து வருகிறது. இதற்கு எண்ணெய் நிறுவனங்களே பொறுப்பு.
- சுரேஷ் கோபி
மத்திய இணையமைச்சர், பா.ஜ.,



நீண்டகால நிலைப்பாடு!


பாலஸ்தீன மக்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என நாம் விரும்புகிறோம். இஸ்ரேலுக்கு, பாதுகாப்பான எல்லைகள் இருக்க வேண்டும். இரு நாடுகளும் அமைதியாக வாழும் முறையை நம் நாடு ஆதரிக்கிறது. நம் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; எனவே, எங்கள் கட்சி தலைவர் ராகுலின் நிலைப்பாடு முற்றிலும் சரியானது.
- சசி தரூர்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்



தலைமையே காரணம்!


சர்வதேச ஆய்வு மையமான, ‘லோவி இன்ஸ்டிடியூட்’ வெளியிட்ட ஆசிய கண்டத்தில் சக்தி வாய்ந்த நாடுகளின் தரவரிசை பட்டியலில் நம் நாடு உயர்ந்ததற்கு, பிரதமர் மோடி தலைமையே காரணம். 12 ஆண்டுகளுக்கு முன் நாம் தரவரிசையில் பின்தங்கி இருந்தோம். ஆனால், இப்போது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். நம் தலைமை வலிமையானது.
- கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us