UPDATED : ஜூலை 20, 2026 11:44 PM
ADDED : ஜூலை 20, 2026 08:03 PM
'வந்தே மாதரம்' பாடல் பாடுவதை தடுத்தாலோ, அவமதித்தாலோ சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது தேவையற்றது. பிரதமர் மோடியோ, மத்திய அமைச்சர் அமித் ஷாவோ, 'வந்தே மாதரம்' பாடல் வரிகளை பார்க்காமல் பாட முடியுமா? சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., சிவசேனா உத்தவ் அணி
தடுக்க முடியாது! ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி, டில்லியில் நடத்தப்பட்ட எங்கள் போராட்டத்தை மத்திய அரசு தடுத்துள்ளது. கண்ணியமாக, சுயாட்சிக்கான எங்கள் பிரசாரத்தை தடுக்க முடியாது. மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பை மீட்டெடுப்பதற்கான போராட்டம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர் தேசிய மாநாட்டு கட்சி
அரசியல் நோக்கம்! 'நீட்' தேர்வுக்கு எதிராக டில்லியில் நடக்கும் போராட்டம் தேவையற்றது. அந்த பிரச்னையில் தீர்வு காணப்பட்ட பின்பும் போராட வேண்டிய அவசியமில்லை. புதிதாக தொடங்கப்பட்ட கட்சி, அரசியல் நோக்கத்துக்காக மாணவர்களை பயன்படுத்தி வருகிறது. இது போன்ற விஷயங்களில், மாணவர்கள் விலகி இருக்க வேண்டும். சஞ்சய் நிரூபம் முன்னாள் எம்.பி., சிவசேனா கட்சி
