ADDED : செப் 23, 2026 08:14 PM
தனிநபர் நிதியுதவி! மழை பாதித்த மலப்புரம் மாவட்டத்திற்கு நான் மேற்கொண்ட தனி விமான பயண செலவு, அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு, எனக்கு அறிமுகமான தனிநபர் ஒருவர் நிதியுதவி அளித்தார். அவர் யார் என்பது குறித்த விபரம் அவசியமற்றது. முந்தைய அரசில் இருந்தவர்களும் இதுபோல் பயணித்துள்ளனர். சதீசன் கேரள முதல்வர், காங்.,
போதையற்ற மாநிலம்! மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட தீவிர குற்ற செயல்களுக்கு போதைப்பொருள் பழக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பழக்கம், ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கிறது. எனவே, மாநிலத்தை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுவேந்து அதிகாரி மே.வங்க முதல்வர், பா.ஜ.,
ரத்து செய்யுங்கள்! தேர்தல் கமிஷனில், முன்பு ஒரே ஒரு கமிஷனர் மட்டுமே இருந்தார்; தற்போது, தலைமை தேர்தல் கமிஷனர் உட்பட மூன்று பேர் உள்ளனர். தலைமை கமிஷனராக உள்ள ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுகிறார். எனவே, எஸ்.ஐ.ஆர்., பணிகள் மேற்கொண்ட மாநிலங்களில் நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும். கபில் சிபல் ராஜ்யசபா எம்.பி., சுயேச்சை
