தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கர்நாடகாவில் ஆளும் காங் எம்எல்ஏ யஷ்வந்த் ராய பாட்டீல் ராஜினாமா; முதல்வர் சிவகுமார் மீது அதிருப்தி

கர்நாடகாவில் ஆளும் காங் எம்எல்ஏ யஷ்வந்த் ராய பாட்டீல் ராஜினாமா; முதல்வர் சிவகுமார் மீது அதிருப்தி

கர்நாடகாவில் ஆளும் காங் எம்எல்ஏ யஷ்வந்த் ராய பாட்டீல் ராஜினாமா; முதல்வர் சிவகுமார் மீது அதிருப்தி


UPDATED : செப் 23, 2026 10:01 PM

ADDED : செப் 23, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 10:01 PM ADDED : செப் 23, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில், தன் சட்டசபை தொகுதியை வறட்சி பாதித்த தாலுகாவாக முதல்வர் சிவகுமார் அறிவிக்காததால், அதிருப்தி அடைந்த இண்டி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால், மாநில அரசு பல தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, சிறப்பு நிதியுதவி வழங்குகிறது.

வட மாவட்டமான விஜயபுராவின் இண்டி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், 59. இவர், தன் தொகுதிக்கு உட்பட்ட இண்டி, சடச்சனா தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் சேர்க்க கோரி, கடந்த மாதம் 28ல், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால், அரசு வெளியிட்ட வறட்சி பாதித்த தாலுகாக்கள் பட்டியலில் இண்டி, சடச்சனா பெயர்கள் இல்லை. அதிருப்தி அடைந்த யஷ்வந்த்ராய கவுடா, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலிடம் நேற்று முன்தினம் கடிதம் வழங்கினார். இந்த தகவல் இன்று வெளியானது.

ராஜினாமா கடித விபரம்:

இண்டி, சடச்சனா தாலுகாக்கள் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளன. மழை பெய்யும் என நம்பி, விவசாயிகள் கடன் வாங்கி, விவசாய பணிகளை மேற்கொண்டனர். மழை இல்லாததால் பயிர்கள் கருகி விட்டன. இரண்டு தாலுகாக்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கும்படி முதல்வர், துணை முதல்வரிடம் மனு கொடுத்தேன். ஆனாலும் இண்டி, சடச்சனா தாலுகாக்கள் தவிர, விஜயபுரா மாவட்டத்தின் மற்ற, 11 தாலுகாக்களையும் வறட்சி பாதித்த பகுதிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தும், என் வார்த்தைக்கு மதிப்பு இல்லை. தற்போதைய அரசியல் சூழலில் சக்தி வாய்ந்தவர்கள், தந்திரங்களை கையாள்பவர்களுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கிறது. என்னை போன்ற சாந்தமான குணம் கொண்ட நபரால் எதுவும் செய்ய முடியவில்லை. என் தொகுதி மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாததால் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகுகிறேன். ராஜினாமாவை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ராஜினாமா கடிதத்தை முன்வைத்து, சட்டசபையில் நேற்று பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் பிரச்னை கிளப்பினார். ''காங்., அரசு மீதான அதிருப்தியால் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களே ராஜினாமா செய்கின்றனர். இந்த அரசுக்கு மானம், மரியாதை இல்லையா?'' என, அவர் கேள்வி எழுப்பினார்.

துணை முதல்வர் பரமேஸ்வர் பேசுகையில், ''யஷ்வந்த்ராய கவுடா ராஜினாமாவுக்கு நாங்கள் காரணம் இல்லை. மத்திய பா.ஜ., அரசு தான் காரணம். மாநிலத்திற்கு தர வேண்டிய பேரிடர் மீட்பு நிதியை நீங்கள் விடுவிக்கவில்லை,'' என்றார்.

இதற்கு, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் முழக்கம் எழுப்பியதால், சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதற்கு மத்தியில் முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''யஷ்வந்த்ராய கவுடாவிடம் பேசினேன். தொகுதி மக்களின் அழுத்தத்தால், உணர்ச்சிவசப்பட்டு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். நாங்கள் எல்லாவற்றையும் சரி செய்வோம். 224 எம்.எல்.ஏ.,க்களும் எனக்கு ஒன்று தான்,'' என்றார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல், ''யஷ்வந்த்ராய கவுடா அளித்த ராஜினாமா கடிதம் சட்டசபை விதிகள்படி இல்லை. இதனால் அந்த கடிதத்தை நான் ஏற்கவில்லை,'' என்றார்.

அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், யஷ்வந்த்ராய கவுடா, இதற்கு முன்பும் ஒரு முறை எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்ததும், பின், திரும்ப பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us