வங்கிகள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்: பரிவர்த்தனை செய்ய அறிவுறுத்தல்
வங்கிகள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்: பரிவர்த்தனை செய்ய அறிவுறுத்தல்
UPDATED : செப் 23, 2026 08:33 PM
ADDED : செப் 23, 2026 08:32 PM
புதுச்சேரி: வங்கிகள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டமைப்பு சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், வரும் 28 முதல் 30ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட உள்ளது.
ஆகையால், வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும். அவசர தேவைக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்., ஐ பயன்படுத்த கொள்ளவும். இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பிற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
