ADDED : செப் 23, 2026 08:14 PM

புதுச்சேரி: தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் புதுச்சேரி கிளை சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு சார்பில், கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.
கடல்சார் தொழில்நுட்ப கழகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் புதுச்சேரி மாநில கிளை சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு சார்பில், கடற்கரை துாய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.
தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் சுரேஷ், மூத்த அறிவியல் அலுவலர் கெய்க்வாட், திட்ட விஞ்ஞானி தாஸ்பீர் சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்த சுரேஷ் பேசினார். இந்திய இளைஞர் விடுதிகள் சங்கத்தின் மாநில பேரவை தலைவர் சரவணன், மாநில பேரவை துணை தலைவர்கள் ராஜமோகன், செந்தில்குமார், பொருளாளர் ஆனந்தராஜன், செயலர் சண்முகவேலு, ஒருங்கிணைப்பு செயலர் சதீஷ்குமார், சாகச பயண குழு ஒருங்கிணைப்பாளர் தேவசேனாதிபதி ஆகியோர் கடற்கரை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, கடற்கரையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடல் சூழலையும் கடற்கரை துாய்மையையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மணி செய்திருந்தார்.
