ADDED : செப் 23, 2026 08:01 PM
புதுச்சேரி: சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினத்தையொட்டி, உழவர்கரை நகராட்சி சார்பில், கடற்கரை பகுதியை துாய்மைப்படுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி மற்றும் வளாகங்கள் மற்றும் சமூகங்களில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான சங்கம் ஏற்பாட்டில், காலாப்பட்டு கடற்கரை பகுதியில் துாய்மை பணி நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு, பேராசிரியர் கோல்டா எட்வின் ஆகியோர் துவக்கி வைத்தனர். பொறியாளர் ஜெய்சங்கர் உட்பட உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல், கடலோர பகுதிகளை சுத்தமாக வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து, மாணவர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
துாய்மை பணியில் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டனர். அப்பகுதியல் 250 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை தரம்பிரித்து மேலாண்மை செய்வதற்கு அனுப்பபட்டது
