UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 09:30 PM

மறக்க மாட்டோம்!
சீனா உடன், 1962ல் போர் நடந்த போது, அப்போது ஆட்சியில் இருந்த காங்., அருணாச்சல பிரதேச மக்களையும், நம் ஆயுதப்படைகளையும் நிர்கதியாக விட்டு விட்டது. இந்த அவமானத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். நம் நாட்டை காங்., ஏழை நாடாகவே வைத்திருந்தது ஏன்? பா.ஜ., ஆட்சியில் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
- கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
புகார் அளிப்போம்!
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நீதியை பெறுவது தற்போது கடினமாகி உள்ளது. இதற்கு ஒரே காரணம், மத்தியில் பா.ஜ., தான். அக்கட்சியை அகற்றினால், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். 10 ஆண்டுகளாக, ஆளுங்கட்சியின் ஏஜன்டுகளாக செயல்படும் அதிகாரிகள் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் அளிப்பேன்.
- அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி கட்சி
துப்பாக்கியின் ஆட்சி!
உத்தர பிரதேசத்தில் ஹைதராபாத் பிரியாணியை விரும்ப மாட்டர் என, எங்கள் கட்சி பற்றி சமாஜ்வாதி கட்சியினர் பேசுகின்றனர். இது, உணவு விவகாரமல்ல. பற்றியது. நாங்கள் அரசியலுக்கு வந்தது அரசியலமைப்பை பாதுகாக்க தான். உ.பி.,யில் தற்போது, சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை; ‘துப்பாக்கியின் ஆட்சி’ நடக்கிறது.
- அசாதுதீன் ஒவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி
