தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: நவ. 22

வலை வளை: நவ. 22

வலை வளை: நவ. 22


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 09:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓட்டு எண்ணும் மையத்தில்

சீட்டு விளையாடிய அதிகாரி

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. பார்மர் மாவட்ட மையத்தில் தேர்தல் முடிவுக்காக அரசியல் கட்சியினர் காத்திருந்தனர்; அப்போது ஓட்டு எண்ணும் பணியில் இருந்த அலுவலர் ஒருவர், கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஊடக பணியாளர்கள், இந்த காட்சியை படம் பிடித்தனர். உஷாரான சக அலுவலர், ‘இப்படி செய்யலாமா’ எனக் கேட்டதும், சீட்டு விளையாடியவர் கம்ப்யூட்டர் திரையை மறைத்தார். வலைதளங்களில் பரவிய இந்த வீடியோ, பல கேள்விகளை எழுப்பியது. ‘அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பலரும் வலியுறுத்துகின்றனர்.

உளைச்சல் தந்தது

ஊபர் பயணம்

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த காஷ்யப் ஸ்வரூப் கர்நாடகாவின் பெங்களூரு சென்றார். ஊபர் டாக்சி முன்பதிவு செய்தவர், கட்டணமாக, 1,100 ரூபாய் செலுத்தினார். ‘ஏசி காருக்கு தான் கட்டணம் செலுத்தினேன். ஏசி போடுங்கள்’ என், அவர் கேட்டதும், டிரைவருக்கு கோபம் வந்து விட்டது. காரை நடுவழியில் நிறுத்தியவர், ‘நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள்’ எனக் கூறி விட்டார். இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தன்னை தாக்க முயற்சித்தாக காஷ்யப் புகார் கூறிய நிலையில், டிரைவர் கிளம்பிச் சென்று விட்டார். ‘இது தானா உங்கள் பாதுகாப்பு தரம்’ என, வருத்தப்பட்டு காஷ்யப் புகார் கூறிய வீடியோவை பார்த்த வலைதள பிரியர்கள், அவருக்கு ஆதரவாக பதிவிடுகின்றனர்.

கலங்கிய கண்களுடன்

கையசைத்த பெற்றோர்

உத்தர பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த அனுஷ்கா, ரயில் நிலையத்தில் தன்னை வழியனுப்ப வந்த பெற்றோர், கை அசைத்தபடியே ரயிலுடன் நடந்து வந்த காட்சியை பதிவிட்டுள்ளார். ரயில் அங்கிருந்து மறையும் வரை இருவரும், மகளை பார்த்து கை அசைத்தபடியே இருந்தனர். சிரிக்க முயற்சித்தாலும், கண்கள் கலங்கியிருப்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை. ‘நான் உன்னை நேசிக்கிறேன் எனச் சொல்வதற்கு பதிலாக பெற்றோர் செய்யும் செயல்கள் இவை’ என்ற அனுஷ்காவின் பதிவு, வலைதளங்களில் பரவியது. ‘பெற்றோர் மகளுக்கு அளித்த பிரியாவிடையை பார்த்து கண்ணீர் விட்டதாக’ பதிவிட்டனர், வலைதளவாசிகள் பலர்.

தொலைந்து போன உறவு

தொழில்நுட்பத்தால் மீட்பு

உ.பி.,யில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகள் மஞ்சுவை கண்டுபிடிக்கும்படி வயதான தாய் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன பெண்ணுக்கு இப்போது வயது, 30; அவர் 4ம் வகுப்பு படிக்கும்போது எடுத்த படம் மட்டுமே இருந்தது. குறிப்பிட்ட அந்த பெண் இப்போது எப்படி இருப்பார் என, உத்தேசமாக ஒரு படத்தை உருவாக்க, கான்ஸ்டபிள் விஜய் பாண்டே முயற்சித்தார். மஞ்சுவின் பெற்றோர், சகோதரியின் படங்களையும் பெற்றார்.

அப்படி அவர், ‘ஏ.ஐ.,’யில் உருவாக்கிய படம், உண்மையில் மஞ்சுவை கண்டுபிடிக்க உதவியது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இருந்த அவரையும், குடும்பத்தினரையும் போலீசார் கண்டறிந்தனர். விஜய் பாண்டேவுக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கிய உ.பி., போலீஸ், ‘தொழில்நுட்பத்தின் வலிமை, காக்கியின் அர்ப்பணிப்பு’ என்ற பதிவில் இதை தெரிவித்துள்ளனர்.

வலைதள பிரியர்

வேலைக்கு வந்தால்

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த லக்சய் மேத்தா, தன் வீட்டுக்கு மின் விசிறி மாட்ட வந்த எலக்ட்ரீசியன் செய்ததை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘அவர் ஒரு கன்டென்ட் கிரியேட்டர். மின் விசிறியின் ஒவ்வொரு பாகத்தையும் பிரித்து, அவற்றுக்கு விளக்கம் அளித்தபடி வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த காலத்தில் ஒவ்வொருவரும் கன்டென்ட் கிரியேட்டர் தான்’ என்கிறார் லக்சய்.

இந்த பதிவை பார்த்த ஒருவர், ‘ஒரு கன்டென்ட் கிரியேட்டர், இன்னொரு கன்டென்ட் கிரியேட்டரை பதிவு செய்கிறார்’ என, கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். ‘இது ஒரு கூடுதல் வருமானம். ஏற்கனவே பலரும் இப்படி வீடியோ போட ஆரம்பித்து விட்டனர்’ என, பலரும் கமென்ட் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us