ADDED : நவ 21, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சுத்துக்கேணி, மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் சந்திரன், 35; தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று (நவ.,20) இரவு சுத்துக்கேணி அம்பேத்கர் சிலை அருகே பஸ்சை திருப்பியபோது, அதேப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், தனது பைக்கை பஸ் திரும்புவதற்கு தடையாக நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து, சந்திரன், அவரிடம் பைக்கை ஓரம் எடுக்கும்படி கூறியபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்த முகிலன், ஜெயபிரகாஷ் ஆகியோர் இணைந்து பஸ் டிரைவர் சந்திரனை திட்டி, தாக்கினர்.
புகாரின் பேரில், ஜெயக்குமார் உட்பட மூவர் மீது காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
