தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: அக். 31

தேசியம் பேட்டி: அக். 31

தேசியம் பேட்டி: அக். 31


ADDED : அக் 30, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 09:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழப்பத்தை விதைக்கிறார்!


காங்., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தொடர்ந்து குழப்பத்தை விதைக்கிறார். அரசியலமைப்பு உரிமைகள் மூலம் ஜனநாயகத்தை காக்கும் தேர்தல் கமிஷன், நீதித்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளை அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார். ராகுல், இந்த நாட்டைச் சேர்ந்தவரா? ஏதோ பாகிஸ்தானில் இருந்து அரசியல் செய்பவர் போல் தெரிகிறது.
- மோகன் யாதவ்
ம.பி., முதல்வர், பா.ஜ.,



தடுக்கும் மத்திய அரசு!


‘இண்டி’ கூட்டணி சார்பில் நவ. 1ல் நடக்க உள்ள, ‘சலோ டில்லி’ பேரணியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாங்கள் நடத்துவது தனித்தனி போராட்டங்கள் அல்ல; அனைத்தும் ஒரே போராட்டம் தான்.
- ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்
காங்கிரஸ்



திசைத்திருப்பும் செயல்!


‘இண்டி’ கூட்டணி பேரணியை தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் கூறுவது, முற்றிலும் பொய். போராட்டக்காரர்களை யார் தடுத்து நிறுத்தினர்? தவறான தகவலைப் பரப்பி, மக்களைத் திசைத்திருப்பும் செயலில் ஈடுபடுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அவர் முன்வைக்க வேண்டும்.
- சம்பித் பத்ரா
தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us