
காங்கிரஸ் ஏமாற்றுகிறது!
தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என, தீர்மானத்தை மட்டுமே காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு உண்மையாக இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது.
கவிதா
எம்.எல்.சி., --
பி.ஆர்.எஸ்.,
போராட்டம் நடத்த துாண்டுகிறதா?
கேரளாவில் எனக்கு எதிராக போராட்டம் நடத்தியது கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் மட்டுமல்ல. தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆதரவாளர்களும் தான். எனக்கு எதிராக அவர்களை போராட்டம் நடத்த அரசு துாண்டுகிறதா?
ஆரிப் முகமது கான்
கேரள கவர்னர்
உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்!
உண்மையான தேசியவாத காங்கிரஸ் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பு நியாயமற்றது. கட்சியை யார் துவங்கினாரோ, அவரையே கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம்.
சரத் பவார்
தலைவர்,
சரத்சந்திர பவார் அணி