ADDED : ஜூலை 03, 2025 12:49 AM

மத்திய அரசின் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் தேவையற்றவை; இவை, நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி உள்ளன. ஏற்கனவே இருந்த சட்டங்களில் இருந்த பெரும்பாலானவை அப்படியே உள்ளன. புதிய சட்டங்கள், பழைய சட்டங்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டுள்ளன.
சிதம்பரம், ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
வெட்கக்கேடானது!
அரசியலமைப்பு சட்டத்தையும், மதச் சார்பின்மையையும் காப்பாற்றுவதாக கூறும் காங்கிரஸ், சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பிடம் ஆதரவு கோருகிறது. இது வெட்கக்கேடு; சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்ளும் காங்., அந்த அமைப்பை அரசியல் நீரோட்டத்துடன் இணைக்க முயற்சிக்கிறது.
ராஜிவ் சந்திரசேகர், தலைவர், கேரள பா.ஜ.,
தவறாக வழிநடத்துகிறார்!
வக்ப் திருத்தச்சட்டத்தை குப்பையில் வீசி எறியுங்கள் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுவது, மக்களை தவறாக வழிநடத்தும் செயல். பீஹார் தேர்தலுக்காக, முஸ்லிம்களை ஓட்டு வங்கிகளாக தேஜஸ்வி, ஓவைசி உள்ளிட்டோர் கருதுகின்றனர். ஏழை முஸ்லிம்கள் பயனடையவே, இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
ஜெகதாம்பிகா பால், லோக்சபா எம்.பி., பா.ஜ.,

