ADDED : ஆக 19, 2026 07:54 PM
தவறான தகவல்! அருணாச்சல பிரதேசத்தில் சீன ஊடுருவல் நடந்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. இது, நம் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை குறைப்பதுடன், நாட்டில் குழப்பத்தையும் உருவாக்கும். நம் எல்லைப் பகுதியில், ராணுவம் மற்றும் இந்தோ – திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தங்கள் ரோந்து பணிகளை வலுப்படுத்தியுள்ளன. கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஜனநாயகத்திற்கு எதிரானது! பஞ்சாபில், பா.ஜ.,வால் காலுான்ற முடியவில்லை. எனவே, எங்கள் கட்சியின் பொறுப்பாளரான டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்துள்ளனர். தேர்தல் காலங்களில், எதிர்க்கட்சியினரின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்வதன் மூலம் பா.ஜ., ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தெளிவாகிறது. பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர், ஆம் ஆத்மி கட்சி
சரியான தருணம்! மத்திய அரசு, மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிட்டது. இன்றைய இளைஞர்கள், வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பு தேர்வு முறைகேடுகள், பணி நியமனங்களில் ஏற்படும் தாமதங்கள் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கான கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை முழு செயல்திட்டத்தை உருவாக்க காங்கிரசுக்கு இதுவே சரியான தருணம். மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
