அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள்: விசாரணை தேவை!
அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள்: விசாரணை தேவை!
UPDATED : ஜூலை 08, 2026 11:16 PM
ADDED : ஜூலை 08, 2026 08:31 PM

அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள் நடந்ததாக சில கட்சிகள் புகார்கள் எழுப்பின. அதற்கு ஆதாரம் உள்ளதா என்பது பிரச்னையில்லை. தற்போது பல கோவில்கள் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன. அதனால் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவருவதற்கு, உ.பி., அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
வெட்கப்படுகிறார்கள்! அயோத்தி ராமர் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து நன்கொடைகள், காணிக்கைகள் வந்துள்ளன. பா.ஜ., மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளால் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், உலகெங்கும் உள்ள சனாதன தர்மத்தை மதிப்பவர்கள் வெட்கப்படுகிறார்கள். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
ஆழ்ந்த உறக்கம்! நீட், நெட் என பல நுழைவுத் தேர்வுகளில் மோசடிகள் நடந்தும், மத்தியில் ஆளும் பா.ஜ., கண்மூடி, ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பை இந்த அரசு மதிக்கவில்லை. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
