UPDATED : ஆக 27, 2026 11:33 PM
ADDED : ஆக 27, 2026 09:12 PM
பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை உயர்ந்ததால், பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு பயனளிக்கும் வகையில், 36,000 கோடி ரூபாய் சர்க்கரை ஊழலுக்கு மோடி அரசு வழிவகுத்துள்ளது. சர்க்கரை பற்றாக்குறை குறித்து முன்கூட்டியே அறிந்தும் மத்திய அரசு மவுனம் காத்தது ஏன்? ரந்தீப் சுர்ஜேவாலா பொதுச் செயலர், காங்.,
தெளிவுப்படுத்த வேண்டும்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேரணி நடத்துவதற்கு அந்நகர மேயர் மம்தானி மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன் பேச்சின் வாயிலாக பன்முகத்தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் மம்தானியின் இந்த செயல்பாடு முரணாக உள்ளது. இது குறித்து அவர் தெளிவுப்படுத்த வேண்டும். நளின் கோஹ்லி செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
இரண்டு அமைப்பு!
நாட்டில் இரு விதமான அமைப்புகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது. ஒன்று கோடீஸ்வரர்களுக்கானது; மற்றொன்று ஏனைய மக்களுக்கானது. கடன் செலுத்த தவறினால் விவசாயிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சில தொழிலதிபர்கள் வங்கி பணத்தை தங்கள் சொத்தாகவே நினைக்கின்றனர். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
