UPDATED : செப் 18, 2026 08:04 PM
ADDED : செப் 18, 2026 07:53 PM
ஆன்மிகமும், தர்மமும் முதியவர்களுக்கான விவகாரம் என, சிலர் கருதும் இந்த கால கட்டத்தில், இளம் தலைமுறையினர் தர்மம் குறித்து விவாதிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி, அறநெறி என்பது நம் மரபணுவிலேயே ஊறிப்போன ஒன்று; அதுவே நம் செயல்களை வழிநடத்துகிறது. மதத்தை விட தர்மம் மேலானது. மோகன் பாகவத் தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
பா.ஜ.,வின் கைப்பாவை! சிவசேனா, தேசியவாத காங்கிரசை தொடர்ந்து, தற்போது, திரிணமுல் காங்கிரசையும் பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் இணைந்து பிளவுபடுத்தி விட்டன. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் கமிஷன், பா.ஜ.,வின் கைப்பாவையாக செயல்படுகிறது. ஓட்டு திருட்டு, ஆட்சி திருட்டு வரிசையில், தற்போது கட்சியே திருடப்பட்டுள்ளது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
வரலாறை படிங்க ராகுல்! மத்தியில், காங்., ஆட்சியில் இருந்த போது, எத்தனை கட்சிகளை அழித்தது; எத்தனை மாநிலங்களில் அரசை கவிழ்த்தது என்பதை அறிய ராகுல் முதலில் வரலாறை படிக்க வேண்டும். தன் சொந்த கட்சியின் வரலாறே தெரியாதவர், அக்கட்சிக்கு எப்படி தலைவராக இருக்க முடியும்? காகிதத்தில் எழுதி கொடுப்பதையே ராகுல் படிக்கிறார். சுதான்ஷு திரிவேதி ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,
