தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : நவ 01, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இரு காதலர்களுடன் சேர்ந்து

கணவனை கொன்ற மனைவி

ஹைதராபாத்: தெலுங்கானாவின் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹன்மாஜிபேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி காசிராம், 26. இவரது மனைவி கும்மடி சவிதா, 25, அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமு, 26, டிராக்டர் டிரைவர் சந்தோஷ், 25, ஆகிய இருவருடன் தகாத உறவு இருந்துள்ளார்.

இதைக் கண்டித்த காசிராமை, இரண்டு காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்ய, சவிதா திட்டமிட்டார். அதன்படி காதலர்கள் இருவரும் மது குடிக்க அழைத்துச் சென்று போதையில் இருந்த காசிராமை கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் உடலை வீசினர்.

பின்னர் நீரில் மூழ்கி கணவர் இறந்ததாக மனைவி நாடகமாடினார். இது குறித்து காசிராமின் தந்தை அளித்த புகாரின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் காதலர்களுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொன்று நாடகமாடியது உறுதியானது. இதையடுத்து மனைவி மற்றும் காதலர்கள் இருவர் என மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

உணவு கழிவு அறையை சுத்தம்

செய்த 4 பேர் மூச்சுதிணறி பலி

உஜ்ஜயின்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் உள்ள பிரபல ஹோட்டலில், உணவு கழிவுகளை சேமித்து வைத்துள்ள அறையை சுத்தம் செய்ய நான்கு தொழிலாளர்கள் சென்றனர்.

பின்னர் மேலும் ஒருவர் அந்த அறைக்குள் நுழைந்தபோது மூச்சுதிணறல் ஏற்பட்டதால் வெளியே வந்தார். இதையடுத்து அறையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க சென்ற, மேலும் இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது பற்றி அறிந்த போலீசார் மீட்புப்படையினருடன் அங்கு சென்று அறையின் கதவை கட்டிங் மிஷினால் வெட்டி, 90 நிமிட போராட்டத்திற்குப் பின் நான்கு பேரையும் சடலமாக மீட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அறையில் தேங்கியிருந்த நச்சுக்காற்றை சுவாசித்ததால் அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழப்புக்கு காரணமான ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணிப்பூரில் இரு தரப்பினர் மோதல்

கூகி இனத்தவர் 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 முதல் கூகி மற்றும் மெய்டி இன பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வன்முறை தணிந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி முதல் நாகா என்ற இனக்குழுவும் மணிப்பூரில் மோதலில் ஈடுபட்டு வருகிறது. கூகி, நாகா இனக்குழுவினர் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நானி மாவட்டத்தில் உள்ள கெக்ரு நாகா கிராமத்தில் நாகா, கூகி இனத்தை சேர்ந்த ஆயுதக்குழுவினர் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் கூகி இனத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மூன்று வாகனங்கள் மோதல்

தலைகீழாக கவிழ்ந்தது டாக்சி

குருகிராம்: ஹரியானாவின் குருகிராமில் அதிவேக மெட்ரோ பாதைக்குக் கீழே உள்ள கோல்ப் கோர்ஸ் இணைப்புச் சாலையில், கருப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அது அடுத்தடுத்து டாக்சி மற்றும் மற்றொரு வாகனம் மோதியது. பின் அந்த கார் பாலத்தின் சுவரில் மோதி நின்றது. கார் மோதிய வேகத்தில் டாக்சி கவிழ்ந்ததில், அதன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

இந்தச் சம்பவம் அவ்வழியே வந்த மற்றொரு காரின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, `டேஷ் காம் காமரா'வில் பதிவாகி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த டிரைவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us