ADDED : அக் 22, 2026 07:45 PM
தேச விரோதிகளுடன் தொடர்பு!
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தேச விரோத சக்திகளுடன் தொடர்பு வைத்துள்ளார். மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை தவறாக துாண்டிவிட்டு வருகிறார். நம் ஜனநாயக அமைப்புகளை எதிர்த்து போராட, அமெரிக்காவில் உள்ள சில தீயசக்திகளுடன் இணைந்து செயல்படுகிறார்.
- நிஷிகாந்த் துபே
லோக்சபா எம்.பி., – பா.ஜ.,
ராகுல் ஒரு சோம்பேறி!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மிகவும் சோம்பேறி அரசியல்வாதி. வாழ்நாளில் அவர் உருப்படியாக எதையும் சாதித்தது கிடையாது. அவர் விடுமுறைக்கு செல்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக பேசும் அவர், தன் அரசியலில் எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்பதே கேள்வி.
- ராஜிவ் சந்திரசேகர்
கேரள பா.ஜ., தலைவர்
தலைமை கூட இல்லை!
எதிர்க்கட்சிகளின், ‘இண்டி’ கூட்டணிக்கு பொதுவான கொள்கையோ, கோட்பாடோ இல்லை. தலைமை கூட இல்லை. மாநில தேர்தல்களில் தங்களுக்குள்ளே ஒருவரையொருவர் எதிர்த்து, இந்த கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. எந்த திட்டமும் இல்லாமல் செயல்படும் இந்த கூட்டணி, மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது?
- ராஜிவ் ரஞ்சன் பிரசாத்
செய்தித் தொடர்பாளர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி
