புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை
UPDATED : அக் 22, 2026 07:41 PM
ADDED : அக் 22, 2026 07:37 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ்., பேரணி ஏற்பாடுகள் குறித்து முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி மற்றும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியைக் காண்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து மணவெளித் தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ., மற்றும் முன்னணி அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், பகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் புதுச்சேரியில் விரைவில் நடைபெறவுள்ள ஆர்.எஸ்.எஸ். பேரணியை மிகவும் எழுச்சியுடனும் கட்டுக்கோப்புடனும் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியை மணவெளித் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புத் திரையிடல் மற்றும் ஒளிபரப்பு ஏற்பாடுகளைச் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் தேவையான பணிகளைப் பகிர்ந்தளித்து, பகுதி வாரியாகப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான அடுத்தகட்ட திட்டமிடல்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மணவெளி தொகுதியில் கட்சி மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.
