தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஜந்தர் மந்தரில் பேராட்டம் யாருக்கும் அனுமதி இல்லை

ஜந்தர் மந்தரில் பேராட்டம் யாருக்கும் அனுமதி இல்லை

ஜந்தர் மந்தரில் பேராட்டம் யாருக்கும் அனுமதி இல்லை


UPDATED : அக் 01, 2026 07:49 PM

ADDED : அக் 01, 2026 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 07:49 PM ADDED : அக் 01, 2026 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, நாளை ஜந்தர் மந்தரில் அறிவிக்கப்பட்ட எந்த போராட்டத்திற்கும், இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று டில்லி போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள் நடந்ததாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி உள்ளன. எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக, தேர்தல் ஆணையர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டு, அதை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிராகரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், ஆணையத்தின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், இப்பிரச்னையை முன்வைத்து ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்த உள்ளதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போரா மற்றும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன், நிகில் டே, நந்திதா நரேன் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், பார்லிமென்ட் தெரு போலீஸ் நிலையத்திற்கு சென்று, அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

ஆனால், ஜந்தர் மந்தரில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று, டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

‘இதுவரை, எந்த அமைப்புக்கும், எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. ஜந்தர் மந்தர் தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால், நான்கு பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதி இல்லை’ என்று, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us