ADDED : நவ 10, 2025 11:51 PM

பார்லி., என்பது நாட்டு மக்களின் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிப்பதற்கான சபை. இங்கு, அரசியல் கட்சிகள் எந்த இடையூறும் செய்யக்கூடாது. சபையின் ஒவ்வொரு வினாடியையும் திறம்பட பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு சபை நடவடிக்கைகளை முடக்குவது, ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.
ஓம் பிர்லா லோக்சபா சபாநாயகர்
விளைவுகளை சந்திக்க நேரிடும்!
பீஹாரில் முதற்கட்ட தேர்தல் முடிந்து நான்கு நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால், ஓட்டளித்தவர்களின் விபரங்கள் பாலினம் வாரியாக இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்த சதி செய்ய மு யன்றால், கடும் விளைவு களை சந்திக்க நேரிடும்.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
காங்கிரசுக்கு பிடிக்காது!
நேரு, காந்தி குடும்பத்தை தவிர வேறு யாரையாவது காங்., நிர்வாகிகள் புகழ்ந்து பேசினால், அக்கட்சி மேலிடத்துக்கு பிடிக்காது. உடனே, அவர்கள் மீது வன்மத்தை கக்கி விடுவர். நாட்டின் மூத்த அரசியல்வாதியான அத்வானிக்கு, காங்., - எம்.பி., சசி தரூர் வாழ்த்து தெரிவித்ததில் எந்த தவறும் இல்லை.
ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்

