டிக்கெட் முன்பதிவில் முறைகேடு; ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு நோட்டீஸ் அனுப்ப டில்லி ஐகோர்ட் உத்தரவு
டிக்கெட் முன்பதிவில் முறைகேடு; ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு நோட்டீஸ் அனுப்ப டில்லி ஐகோர்ட் உத்தரவு
UPDATED : செப் 30, 2026 09:15 PM
ADDED : செப் 30, 2026 08:12 PM

சிறப்பு நிருபர்
ரயில்வே இணையதளம், செயலியில் பயண டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடுகள் நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பதிலளிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணத்துக்கான டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி வழியாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில் சில முறைகேடுகள் நடப்பதாக கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'தட்கால் மற்றும் சாதாரண டிக்கெட்டுகள், போலி மென்பொருட்கள் மற்றும் முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தி பயணியருக்கு சீரான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு உத்தரவிட்டுள்ளது.
